அன்னை மடியாகிய புவி
மலை காடுகள் நிலம் வான் கடல் வரை யாவையும் உனதே ! அதில் விளையாடிடும் அசைந்தாடிடும் உயிர் யாவையும் உனதே ! பனிப்பாறையும் மணல்பாலையும் நெருப்பாழியும் உனதே ! உயிர்க்கருளாகிடும் இசைப்பாடிடும் மழை ஆறுகள் உனதே ! அவையாவையும் உனதாகியச்சிறு நினைப்பால் மதி இழந்தாய் ! அன்னை மடியாகிய புவி கோளினை அழித்தாளவே துணிந்தாய் ! வரும்காலம் உன்னிலை மாற்றும் வரை பொறுக்காதே ! விழித்தெழுவாய்! இன்று உனை காக்க வேறு புவியேது! அதை இழக்காதே ! பகுத்தறிவாய் !