நல்குணமே இன்முகமே

பனியென பிணி அணைந்து மறையட்டும் !
இனிதென பணி அனைத்தும் சிறக்கட்டும் ! 

அகத்தினில் இனிமை மலர்  மலரட்டும் !
முகத்தினில் இனிமை சுடர் ஒளிரட்டும்  !

சொற்களில் இனிமை குளிர் பரவட்டும் !
செயல்களில் இனிமை தளிர் செழிக்கட்டும் !

உயிரிருள் நீக்கும் உயரருள் சேர்க்கும்
நல்குணமே இன்முகமே !
எக்கணமும் இவ்விதமே ! 

Comments

Popular posts from this blog

அன்னை மடியாகிய புவி