அன்னை மடியாகிய புவி

 மலை காடுகள் நிலம் வான் கடல் வரை யாவையும் உனதே !
அதில் விளையாடிடும் அசைந்தாடிடும் உயிர் யாவையும் உனதே !
பனிப்பாறையும் மணல்பாலையும் நெருப்பாழியும் உனதே !
உயிர்க்கருளாகிடும் இசைப்பாடிடும் மழை ஆறுகள் உனதே !

அவையாவையும் உனதாகியச்சிறு நினைப்பால் மதி இழந்தாய் !
அன்னை மடியாகிய புவி கோளினை அழித்தாளவே துணிந்தாய் !
வரும்காலம் உன்னிலை மாற்றும் வரை பொறுக்காதே !
விழித்தெழுவாய்!
இன்று உனை காக்க வேறு புவியேது! அதை இழக்காதே !
பகுத்தறிவாய் !

Comments

Popular posts from this blog

நல்குணமே இன்முகமே